UPSC Civil Services (Main) Examination 2026 — Tamil Literature Paper II: Question Paper | Plutus IAS

UPSC Civil Services (Main) Examination 2026 — Tamil Literature Paper II: Question Paper | Plutus IAS

The questions below are from Tamil Literature Paper II of UPSC Civil Services (Main) Examination 2026 (held 2026-08-30) — the actual paper, which is public government content. This page carries the questions for reference and revision; model answers for this paper are not published here.

Official paper (PDF): upsc.gov.in.

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக : 10×5=50 – (a) கல்வியினால் வரும் சிறப்புகளை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எங்ஙனம் உணர்த்துகிறான் ? 10 – (b) 'உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே' – விளக்குக. 10 – (c) பெரியாரைத் துணைக்கோடலின் மேன்மையை வள்ளுவர் வழி வகுத்துரைக்க. 10 – (d) கடக்களி நடத்திய கருணை மறவன் கோவலன் என்பதை இளங்கோவடிகள் எவ்வாறு பதிவு செய்கிறார் ? 10 – (e) 'நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்' எனக் கும்பகர்ணன் கூறக் காரணம் யாது ? 10
  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக : – (a) மதுரை மாநகரின் மாண்பினையும் அமைப்பினையும் சிலப்பதிகாரத்தின் வழி விவரித்துரைக்க. 20 – (b) வாழ்வின் நிலையாமையைப் புறநானூற்றுப் பாடல்களின் வழி நிறுவுக. 15 – (c) 'திருப்பாவையில் இயற்கை வருணனை' – கட்டுரை வரைக. 15 KVMS-D-TML 2 # **Q3. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக :** – (a) அரசர்க்கு வேண்டிய நிர்வாக மேலாண்மையை வள்ளுவர் வழி நின்று தொகுத்துரைக்க. 20 – (b) கும்பகர்ணனின் நன்றி மறவாத் தகைமையைப் புலப்படுத்துக. 15 – (c) மாணிக்கவாசகர் எவற்றையெல்லாம் நீக்க வேண்டுமென இறைவனிடம் விண்ணப்பிக்கிறார் ? 15 # **Q4. இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக :** – (a) "என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்." 15 – (b) "நீர்வழிப் படுஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படுஉம்." 20 – (c) "பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது." 15 KVMS-D-TML 3 # SECTION B
  3. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக : 10×5=50 – (a) குடும்ப விளக்குத் தலைவி தங்கம் குழந்தை வளர்க்கும் திறத்தை எழுதுக. 10 – (b) 'சந்திப் பிழைகள் போன்ற சந்ததிப் பிழைகள் நாங்கள்' என்று நா. காமராசன் யாரைக் குறிப்பிடுகிறார் ? 10 – (c) அகிலனின் சித்திரப்பாவையில் ஆனந்தி பாத்திரத்தின் பண்பினைச் சித்திரிக்க. 10 – (d) எவை புரட்சி மனப்பான்மையைத் தீய்த்து விட்டன என்று அறிஞர் அண்ணா குறிப்பிடுகிறார் ? 10 – (e) அறம் வாழ்வதற்குச் செய்ய வேண்டிய மாறுதல்களாக மு.வ. குறிப்பிடுபவை யாவை ? 10
  4. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக : – (a) ஜெயகாந்தனின் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள மனித வாழ்க்கையின் யதார்த்தச் சூழல்களை விவரிக்க. 20 – (b) முத்துப்பட்டனின் இயல்புகளை ஆராய்க. 15 – (c) மலை அருவி நாட்டுப்புறப் பாடல்களில் பதிவாகியுள்ள பழக்க வழக்கங்களை விளம்புக. 15
  5. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக : – (a) பெண் கல்வியின் மேன்மையினைக் குடும்ப விளக்கின் வழி மொழிக. 15 – (b) 'கண்ணன் பாட்டில் கவிநயம்' – கட்டுரை வரைக. 20 – (c) விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைக் கறுப்பு மலர்கள் யங்ஙனம் பதிவு செய்கிறது ? 15 KVMS-D-TML 4 # **Q8. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக :** – (a) பெண்களுக்கு எதிரான பழமைவாதங்களைச் சித்திரப் பாவை வழி கட்டுரைக்க. 15 – (b) மலையருவித் தொழிலாளர் பாடல்களின் பொருண்மையினைப் பகிர்க. 15 – (c) சமூக உறவுகளின் வலிமையை முத்துப்பட்டன் கதைப்பாடல் வெளிப்படுத்துமாற்றை ஆய்ந்துரைக்க. 20 KVMS-D-TML 5

Questions reproduced from the official paper for study purposes; verify on the exam-conducting body’s official website.


Related — other papers of this exam

No Comments

Post A Comment